ஜேர்மனியில் சிறீலங்கா சுதந்திரதின புறக்கணிப்புப் போராட்டம்


சிறுலங்கா சுதந்திர நாளை முன்னிட்டு பேர்லின் தலைநகரில் ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிவு , ஈழத்தமிழர்களின் வலியை பேசும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக Brandenburger Tor வின் வரலாற்றுச் சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.  பல்லின மக்கள் மிகவும் ஆர்வமாக ஓவியங்களை பார்வையிட்டு இளையோர்களுடன் உரையாடினர், ஏர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

சர்வதேச அரங்கில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் வகையில் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் வலியை எடுத்துரைக்கும் முகமாக இந்த நிகழ்வு மிகவும் காத்திரமான வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments