நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் பணயக்கைதிகள் நாடகம் முடிவுக்க வந்தது!!


நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் லீட்செப்லின் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நடந்த பணயக்கைதி தடுத்துவைப்பு முடிவுக்கு வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 17:00 மணிக்கு ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைந்த ஆயுதமேந்திய ஆயுததாரி முதலில் கொள்ளையாக ஆரம்பித்த பின்னர் பயணக் கைதி நாடகம் 5 மணி நேரம் இடம்பெற்றது.

துப்பாக்கி முனையில் 44 வயது பிரிட்டிஸ் நபரை பயணக்கைதியாக வைத்திருபதை புகைப்படங்கள் காட்டின. அத்துடன் துப்பாக்கி ஏந்திய நபர் தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் புகைப்படங்களை ஆம்ஸ்டர்டாம் தொலைக்காட்சிக்கு AT5 க்கு அனுப்பினார்.


துப்பாக்கிதாரி தண்ணீர் கேட்டபோது, பணயக்கைதி அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடினார்.

பணயக்கைதி கடைக்கு வெளியே ஓடிபோது துப்பாக்கிதாரி வேண்டுமென்றே துரத்திபோது காவல்துறையின் மகிழுந்தில் மோதிய ஆயுததாரி காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்தார்.

வீதியில் படுகாயத்துடன் கிடந்த ஆயுததாரியிடம் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என்பதை சோதிக்க ரோபோ மூலம் தேடுதல் நடத்தப்பட்டது.

பின்னர் 27 வயதுடைய அந்த நபரைக் கைது செய்து மருத்துவர்களர் சிகிற்சை அளிக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டிடத்திற்குள் இன்னும் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களில் படங்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பகிர்வதை நிறுத்துமாறு அப்பகுதியில் உள்ள மக்களை காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

பணயக்கைதியின் வீரச் செயலை ஆம்ஸ்டர்டாம் காவல்துறைத் தலைவர் ஃபிராங்க் பாவ் பாராட்டினார். பணயக்கைதி அதைச் செய்யவில்லை என்றால் நாங்கள் மோசமான இரவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆப்பிள் ஸ்டோரின் தரைத்தளத்தில் நான்கு பேர் அலுமாரிக்குள் பணயக்கைதி நாடகம் முடியும் வரை மறைந்திருந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் 27 வயதுடைய கிரிப்டோ கரன்சியில் €200m (£165m; $230m)) கோரிய குற்றப் பின்னணி கொண்டவர் என்று காவல்றையினர் தெரிவித்தனர்.


No comments