49வது அமர்வு இன்று!ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 49வது அமர்வு இன்று (28) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த அமர்வு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை மார்ச் 03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் அறிக்கை மீதான விவாதமும் அதே திகதியில் இடம்பெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இலங்கை தூதுக்குழுவில் பங்கேற்கவுள்ளார்

No comments