உக்ரேனில் அரச இணைங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல்!!


உக்ரேனின் அரசாங்க வலைத்தளங்கள் பாரிய சைபர் தாக்குதலைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை செயலிழந்தன என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாரிய சைபர் தாக்குதல் விளைவாக ஏழு அமைச்சகங்களின் இணையதளங்களும், நாட்டின் அமைச்சரவை, கருவூலம், தேசிய அவசர சேவை மற்றும் உக்ரேனியர்களின் மின்னணு பாஸ்போர்ட்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள் சேமிக்கப்படும் மாநில சேவைகள் இணையதளம் ஆகியவை செயலிழந்தன.

இணையதளங்களில் உக்ரேனிய, ரஷ்ய மற்றும் போலந்து மொழிகளில் உக்ரைனியர்களின் தனிப்பட்ட தரவுகள் பொது களத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் உள்ளன. 

உக்ரைன் மக்களின் தனிநபர் விவரங்களை பொதுவெளியில் பதிவேற்றிவிட்டதாகவும், வரும் நாட்களில் மோசமான எதிர்வினைகளை சந்திக்கத் தயாராகுமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த காலங்களில் இதே போல் பல சைபர் தாக்குதல்களை ரஷ்யா நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

எங்கள் ஐ.டி வல்லுநர்கள் ஏற்கனவே சைபர் தாக்குலுக்கு உள்ளான இணையத்தளங்களை மீட்டெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ ட்விட்டரில் எழுதியிருக்கிறார். 

No comments