சங்கரியை துரத்துகின்றது காலம்?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசஙிகரிக்கு அன்டியன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிசிஆர் பிரிசோதனையும் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பரிசோதனையிலும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் இரண்டு மெய் பாதுகாவலர்கள், சாரதி உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments