ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதிகள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்! 3 பேர் பலி!!


மத்திய கிழக்கானஅபுதாபியில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலையை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய சந்தேகத்திற்குரிய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் இந்தியர்கள் எனவும் ஒருவர் பாகிஸ்தானியர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தனித்தனி தீவைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இராணுவ நடவடிக்கைகள் அறிவித்ததையடுத்து ஒரு எண்ணெய் ஆலையில் மூன்று பெட்ரோல் குதங்கள் வெடித்து எரிகிறது. அத்துடன்  விமான நிலையத்தில் தீப்பற்ற வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

2019 இல் யேமனில் தனது இராணுவ பிரசன்னத்தை பெருமளவில் குறைத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அது ஆயுதம் ஏந்திய மற்றும் பயிற்சியளித்த யேமன் படைகள் மூலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. உள்நாட்டுப் போரில் யேமன் அரசாங்கத்திற்காக போராடும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு நாடாகும்.

ஆளில்லா விமானத் தாக்குதல்கள் சவூதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலின் அடையாளமாகும். தற்போது இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கியும் திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments