கோட்டா ஆட்சியில் கரையொதுங்கும் சடலங்கள்!!கொழும்பு பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் வடமராட்சிக் கடற்கரையில் தொடர்ச்சியாக உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதுங்கி வந்தமையும் அவை இதுவரை அடையாளம் காணமல் இருந்தமையும் இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments