நல்ல பேரம் :இந்தியா பாராட்டு!ஒருவாறாக மோடிக்கு முக்கி தள்ளி தமிழ் தரப்பு கடிதம் எழுத மறுபுறம் இந்தியா கோத்தா அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை நேற்று (06) கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது நன்றியை தெரிவித்துகொண்டுள்ளது.

“இந்திய-இலங்கை பொருளாதார மற்றும் சக்தி பங்குடைமையில் புதியதோர் மைல் கல். திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்காக சகல தரப்பினருக்கும் வாழ்த்துக்கள்“ என்றும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

“இந்திய- இலங்கை தலைமைத்துவங்களின் வழிகாட்டல்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆதரவிற்கும் உளப்பூர்வமான பாராட்டுக்கள்” என்றும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No comments