கம்மன்பிலவுக்கு அனுமதி: சுசிலோ வீட்டிற்கு!

இலங்கை ஆளும் தரப்பின் உட்கட்சி மோதல் மும்முரமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உடன் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் அமைச்சர்களில் உதய கம்மன்பிலவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் இந்திய கூட்டு முயற்சிக்கே அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இது தொடர்பான ஒப்பந்தம் ஒரு வாரத்தில் கையெழுத்தாகுமென அறியமுடிகின்றது.

 

No comments