பொதுஜனபெரமுன தோற்கடிக்கப்படும்:திஸ்ஸ





இலங்கையில்  எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்களா என்பது பெரிதும் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வரிசை, பால்மா வரிசை, மண்ணெண்ணெய் வரிசை என மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக நடுத்தர மக்கள் ஒருவேளை உணவை பெற்றுக் கொள்வதில் கூட சிரமங்களை எதிர்க்கொள்கிறார்கள். 

அவசரமற்ற அபிவிருத்தி பணிகளை சற்று தாமதப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பிரதமரிடம் இரண்டு முறை கோரிக்கை விடுத்தேன். பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் மதிப்பளிக்கப்படவில்லை.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் 2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்து நாளுக்கு நாள்; வெறுப்பு தீவிரமடைந்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வெகுவிரைவில் வீதிக்கிறங்குவார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்களா என்பது பெரிதும் சந்தேகத்திற்குரியது’ என தெரிவித்தார்.

No comments