ஜேவிபி சார்பு அகில இலங்கை பொது மீனவ சம்மேளனமும் களத்தில்!

 
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதருடன் ஜேவிபி சார்பு அகில இலங்கை பொது மீனவ சம்மேளன பிரதிநிதிகள் இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் சந்தித்து பேசியிருந்தனர்.

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பதி மற்றும் சந்திரசேகரன்,மீனவ சம்மேளன செயலாளர் ரத்ன கமகே உள்ளிட்டவர்களே சந்திப்பில் ஈடுபட்டனர்.

அதேவேளை இந்திய மீனவர்களது அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரும் மகஜரொன்றை இந்திய பிரதமரிடம் சேர்ப்பிக்கவும் துணை தூதரிடம் கைளியத்துள்ளனர். 


No comments