நாயாற்றில் கரை ஒதுங்கியது யாருடையது?முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள கடற்கலம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. பாரிய கப்பல்களிற்கு பொருட்கள் ஏற்றப் பயன்படுத்தப்படும் வத்தை ஒன்று  ஆள்கள் எவரும்  இல்லாத  நிலையில்  ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

நாயாறு கடற்கரையில் இன்று அதிகாலை கரை ஒதுங்கிய குறித்த இந்த வத்தை பிற நாடு ஒன்றில் இருந்து கடல் அலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இருந்தபோதும் இதுவரை எவரும் உரிமை கோராத போதும் இது எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் ஆராயப்படுவதோடு எவருக்குச் சொந்தமானது எனவும் தேடப்படுகின்றது.

No comments