முகநூல் பதிவிற்கு ஒருவருடத்தின் பின் பிணையாம்?



தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாஸ (வயது - 30) என்ற குடும்பஸ்தர் இன்று(27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முகநூலில் தேசிய தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டதன் பிரகாரம் இவர் 2020 ஆம் ஆண்டின் நவம்பரில் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் ஒரு வருடத்தின் பின்னராக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை காவல் நிலையத்திற்குச் சென்று காலை கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.


No comments