கோத்தா கொலைக்கு தண்டனை வேறிடத்திற்கு!

கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அரங்கேற்றப்பட்ட வெலிக்கடை படுகொலைக்கு சிறைச்சாலை அதிகாரி மரணதண்டனை பெற்றுள்ளார். 

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுவிக்கப்பட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

கைதிகள் தேடி தேடி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments