இலங்கையில் மின்வெட்டு இல்லையாம்!இலங்கையில் இன்று மாலை முதல் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை இன்று காலை அறிவித்திருந்த நிலையில், தற்போது தனது முடிவை மீளப்பெற்றுள்ளதுடன், நேற்று மாலை பழுதடைந்த தனியாருக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையம் பழுது பார்க்கப்பட்டுள்ளதால் இனி மின்வெட்டு இருக்காது என அறிவித்துள்ளது.

குறித்த மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால் நான்கு வலயங்களில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணிநேரம் மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் மேலதிக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சுகத் தர்மகீர்த்தி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தற்போது குறித்த மின் உற்பத்தி நிலை யம் பழுதுபார்க்கப்பட்டுள்ள நிலையில், 172 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப் படுவதால் மின்வெட்டு இருக்காது என சபை அறிவித்துள்ளது.

No comments