வெட்கமில்லையா? நீதித்துறைக்கு!


கொலைகள்,ஆட்கடத்தல்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீதிபதிகள் இணைந்து நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்ற கட்டடம் ஒன்றை இலங்கை நீதி அமைச்சர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதி சகிதம் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்திருந்தார்..  

சனநாயக உலகொன்றில் கிரிமினல் குற்ற பின்னணி உள்ள ஒருவர் நீதிமன்றம் சார் நிகழ்வுகளில் நீதிபதிகள் , சட்டத்தரணிகள் சகிதம் கலந்து கொள்ளுவது சாத்தியமானதா ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா மீது கொலை குற்ற சாட்டுகள் இருக்கின்றன .

கடத்தல் , காணாமலாக்குதல் தொடர்ப்பன முறைப்பாடுகள் இருக்கின்றன. 

கற்பழிப்பு , விபசார வலையமைப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான சாட்சிகள் இருக்கின்றன .

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டது தொடர்ப்பன குற்றசாட்டுகள் இருக்கின்றன 

அரச மற்றும் தனியார் சொத்துக்களை அபகரித்தல் , கொள்ளையடித்தல் போன்ற கொடூரங்களில்  ஈடுபட்டது தொடர்ப்பன  சான்றுகள் இருக்கின்றன .

மீனவர்கள் உட்பட பலரிடம் கப்பம் வாங்குவது தொடர்பான பதிவுகள் இருக்கின்றன 

அரச நிர்வாகத்தை சீரழித்தது முதல்    பொது நிதியை துஸ்பிரயோகம்   வரையான சான்றுகள் இருக்கின்றன . 

மேற்குறிப்பிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் அதிகாரம் இருக்கின்ற என்கிற தொனியில் அரச ஆதரவுடன் நீதிமன்ற  நிகழ்வுகளில் கலந்து கொள்ளுகின்றமை தொடர்பிலேயே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


No comments