பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

 தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் கூடிய மத்திய குழு கூட்டத்தில் கேள்விகளிற்கு பதிலளிக்க முடியாது வீ.ஆனந்தசங்கரி இடையில் வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ள அவரை அழைக்க சென்ற தலைவரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் புதிய தற்காலிக செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீ.ஆனந்தசங்கரி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வுpரைவில் தேர்தல் மூலம் புதிய செயலாளர் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments