ராஜிதவிற்கு சிறையில் களி?


கோத்தபாயவின் வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்தியவர்களிற்கு தண்டனை வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் எதிர் தரப்பின் முக்கிய பிரமுகரான ராஜித சேனாரத்தின சிக்கலிற்குள்ளாகலாமென நம்ப்படுகின்றது

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் ​பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளைவான் விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

இந்த வழக்கு, முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைத்த மொஹமட் ரம்மி ஆகியோருக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

No comments