இந்திய மீனவர்கள் விடுதலை:தமிழக முதலமைச்சருடன் பேச்சு!இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்ராலினைச்  சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்தனர்.

இராமேஸ்வரம் மீனவர்களிற்குச் சொந்தமான 75 படகுகளை கடந்த 4 ஆண்டுகளக இலங்கை கடற்படை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் தடுத்து வைத்த சமயம் அவை அழிவடைந்தன.

இதேநேரம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட 68 மீனவர்களில் 12 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தொடரும் நெருக்கடிக்கு கச்சதீவுப் பகுதியில் மீன்பிடிக்கும் எமது உரிமையை பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.


No comments