யாழ்ப்பாண இடமாற்றம் இரத்து!
வடக்கு ஆளுநரது தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கான இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

7 நிர்வாக சேவையினருக்கு வழங்கப்பட்ட இடமாற்றமே இரத்துச் செய்யப்பட்டது.

இலங்கை முழுவதும் அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சின் கீழ் பணியாற்றும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் வருடாந்த இடமாற்றம் என 2021 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதிய கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த இடமாற்றங்களே தற்போது இதே அமைச்சினால் 2022 ஜனவரி 10ஆம் திகதிய கடிதம் மூலம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் சேவையாற்றியவர்கள் அரசியல் நோக்கம் கொண்டு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதோடு பலரும் மேன்முறையீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments