இலங்கை பிடித்த படகுகளிற்கு நிவாரணம்!இலங்கை கடற்படையினரால் கைது  செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கும் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்குவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் இந்திய ரூபாயில்  தலா 5 லட்சம் ரூபா  வழங்கப்படும் எனவும்  17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் ரூபா வீதம் என மொத்தம் 5.66 கோடி ரூபா  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் மீனவர் கூட்டமைப்பு நேற்று முன்தினம் தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments