ராஜிதவிற்கு கொரோனா!இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ராஜித சேனாரத்ன வீட்டுத் தனிமைப்படுத்த லில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ மேற்பார்வை யின் கீழ் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக முன்னாள் சுகாதார அமைச்சருடன் நெருக்கமாக இருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் ராஜித சேனாரத்ன நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments