யாழ்ப்பாண வடலியிலும் சீனாவிற்கு கண்!இலங்கையின் துணை நகரமான போர்ட் சிற்றியில் நாட்ட யாழ்ப்பாணத்திலிருந்து பனைவடலிகள் சென்றடைந்துள்ளது.

ஈபிடிபி அமைப்பின் ஆலோசகரான சகாதேவனின் ஏற்பாட்டில் பனை வடலிகள் எடுத்து செல்லப்பட்டு நாட்டப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த சீன தூதரது கோரிக்கைப்பிரகாரம் பனைவடலிகள் எடுத்து செல்லப்பட்டு நாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே ஏற்கனவே காலிமுகத்திடலில் பனை மரங்கள் நாட்டப்பட்டிருந்த போதும் அவை பின்னராக பட்டுப்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments