உக்ரைன் விவகாரம்! லத்தீன் அமெரிக்காவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நிரகாரிக்க மறுத்துவிட்டது ரஷ்யா!!


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவுள்ள விவகாரம் மேற்கு நாடுகளுடன் முட்டிமோதும் ரஷ்யா லத்தீன் அமெரிக்க நாடுகளான கீயூபா மற்றும் வெனிசுலாவிற்கு ரஷ்யப் இராணுவ படைப்பிரிவுகளை அனுப்புவதையோ அல்லது அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதையோ நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மொஸ்கோ மீண்டும் நிரகாரிக்க மறுத்துவிட்டது.

அத்துடன் லத்தீன் அமெரிக்காவுக்கு ரஷ்ய ஏவுகணைகளையோ அல்லது இராணுவ பிரிவுகளை அனுப்பும் சாத்தியத்தை உறுதிப்படுத்தவோ அல்லது விலக்கிக்கொள்ளவோ முடியாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறினார்.

ரஷ்யா, அமெரிக்கா, நேட்டோ மற்றும் பிற மேற்கத்திய சக்திகளுக்கு இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் உக்ரைன் நெருக்கடியில் ஒரு முன்னேற்றத்தை உருவாக்கத் தவறியதை அடுத்தே அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்களன்று ரஷ்யா வெவ்வேறு காட்சிகளை மதிப்பாய்வு செய்கிறது என்றார்.

லத்தீன் அமெரிக்காவைப் பொறுத்தவரை நாங்கள் அங்கு இறையாண்மை கொண்ட நாடுகளைப் பற்றி பேசுகிறோம். அதை மறந்துவிடக் கூடாது. மற்றும், தற்போதைய சூழ்நிலையில், ரஷ்யா அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது என்று அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பெலாரஸின் எல்லைகளுக்கு அருகில் தற்போது 30,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உக்ரைன் அருகே 100,000 மேற்பட்ட படையினரை ருஷயா நிலை நிறுத்தியுள்ளது.

No comments