பண்டிதருக்கு அஞ்சலி!தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதர் அவர்களின்  இல்லத்தில் நடைபெற்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளியான பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தலில் அவரது இல்லத்தில் பலரும் பங்கெடுக்க இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மதிய நிகழ்வில் பண்டிதன் அவர்களின் தாயாருடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், வீரா ஆகியோர் கலந்து கொண்டார்கள். நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து பண்டிதர் அவர்களின் தாயாரினால் மதிய போசனமும் வழங்கப்பட்டது.
No comments