ஜிம்பாப்வேயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கருவுற்ற 5,000 பள்ளி மாணவிகள்!


ஜிம்பாப்வேயில் ஊரடங்கு காலத்தில் 5,000 பள்ளி மாணவிகள் கருவுற்றதாக திடுக்கிடும் தகவல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் ஊரடங்கு விதிகளால் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் சிறுமிகள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சுமார் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், சில பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், குழந்தைகளுக்கான பாலியல் குற்றச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினாலும், வறுமை, கலாச்சாரம் மற்றும் மத அடிப்படையிலான நம்பிக்கை காரணத்தினாலும் பல சிறுமிகள் கருவுற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதற்கு வழியில்லாத 13 வயது சிறுமிகள் கூட குழந்தை பெற்றெடுத்த அவலம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  2021 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பள்ளி மாணவிகள் இவ்வாறு கருவுற்று உள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகாரத்துறை அமைச்சர் Sithembiso Nyoni கவலைத் தெரிவித்துள்ளார்.

No comments