13ஜ நிராகரிப்போம்! யாழில் முன்னணி ஆதரவாளர்களது பேரணி

13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி  ஆதரவாளர்கள் பங்களிப்புடன்

யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு  பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பேரணியானது பருத்தித்துறை வீதியினூடாக கிட்டுப் பூங்காவிற்கு சென்று நிறைவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றதுடன் கட்சியின் தலைவர்கள் பலரும் உரையாற்றியிருந்தனர்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது.

வடமாகாணத்தை சேர்ந்த சுமார் ஆயிரக்கணகான  ஆதரவாளர்கள் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.அவர்களிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் கட்சியால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments