உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பீதியை கிளப்ப வேண்டாம் - உக்ரைன் அதிபர்


உக்ரைன் எல்லையில் ரஷயா படைகளைக் குவிப்பது குறித்து மேற்கத்தைய நாடுகளின் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தனது நாட்டு மக்களிடையே பீதியை கிளப்புவதால் அதனைத் தவிர்க்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துக்கொண்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பீதியை கிளப்புகின்றது. இதனால் உக்ரைனின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் நாட்டிற்குள் இதுவே மிகப்பெரிய ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட காலமாகவே உக்ரைன் மக்கள் போர் அச்சத்துடனேயே வாழ்வதாகவும், வழக்கத்திற்கு மாறான ரஷ்யாவின் படை குவிப்பே தற்போதைய பதற்றத்திற்கு காரணம் என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.


No comments