எதிர்வரும் புதன்கிழமை வல்வெட்டித்துறை நகராட்சிக்கு புதிய தவிசாளர்


வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர், எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை தெரிவு செய்யப்படுவார் என,வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பட்ரிக் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

இச்சபையின் வரவு - செலவுத் திட்டம், கடந்த மாதம் இரு முறை சமர்ப்பிக்கப்பட்ட போது, இரு முறையும் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்தே, சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்வுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பின்னர், இதுவரை முறையே இரு தலைவர்கள் பணியாற்றியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் ஆரம்பத்தில் இருந்து வந்த இச்சபை, சில மாதங்களுக்கு முன்னர் சுயேட்சைக் குழுவின் ஆளுகைக்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments