சுவிஸில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டி!

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த

12.12.2021 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸின் பல பாகங்களிலும் இருந்து வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர்.

தமிழீழத்தின் கராத்தேயின் தந்தை என அழைக்கப்படும் திரு ஷீகான் பொனி றொபேட்ஸ் அவர்களின் பயிற்சி பட்டறையில் பங்கெடுத்தவரும் ஜப்பான் கராத்தே ஈதோ சூ காய்   சுவிஸ் கிளையின் தலைமை ஆசிரியருமான ஷீகான் விபுலானந்தன் கௌரிதாசன் ( Präsident, Itosu-kai Schweiz) அவர்களின் நெறிப்படுத்தலில், சென்சே சப்தேஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இளையோர்கள் முன்னின்று நடத்திய சுற்றுப்போட்டியில் நடுவர் குழுத்தலைவராக செம்பாய் மிதுரன் பணியாற்றினார்.

 இளையோரின் செயற்படுதிறன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களின் ஒழுக்கம் போன்றவற்றை அவதானித்த சுவிஸ் கிளைப்பொறுப்பாளர்கள், முதன்மை விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும்  வியந்து பாராட்டினர்

 சிறப்பு விருந்தினராக பேர்ண்  ஷோடோகன்  (Shotokan karate School Bern)கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்சே மன்மதன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சென்சே சிறிவிஜயகுமார் மற்றும் செம்பாய் வைகுந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

காலை 9.00 மணிக்கு  தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு மாலை 18.30 இற்கு நிறைவு பெற்றது. போட்டியில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் பதக்கம் அணிவித்ததோடு வெற்றி ஈட்டியவர்களுக்கு சான்றிதழும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது. இறுதியாக சிறப்பு விருந்தினர்,கௌரவவிருந்தினர், போட்டி நடத்துனர் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரால் மதிப்பளிக்கப்பட்டதை  தொடர்ந்து தேசியக்கொடி இறக்கலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments