கடந்த ஆறு மாதங்களில் 182,000 போலி கோவிட் பாஸ்களை கண்டறிந்தது பிரஞ்சுக் காவல்துறை!!


பிரான்ஸ் முதன்முதலில் தனது கோவிட் பாஸை கடந்த ஜூலை பிற்பகுதியில் வெளியிட்டது. உணவகங்கள், பார்கள், கலாச்சார இடங்கள், பெரிய நிகழ்வுகள் மற்றும் நீண்ட தூர பொது போக்குவரத்து ஆகியவற்றைப் பார்வையிட வேண்டியது அவசியம் என்றது.

இந்நிலையில் கோவிட் பாஸ் அறிமுககப்பட்டதிலிருந்து இதுவரை 182,000 போலி கோவிட் பாஸ்களை பிரஞ்சுக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளதாக உளதுறை அமைச்சகம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட 110,000 என்ற எண்ணிக்கையை விட சமீபத்திய எண்ணிக்கை கணிசமாக அதிகம்.

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கடந்த வாரம் காவல்துறை மற்றும் ஜெண்டர்மேரியின் இயக்குநர் ஜெனரல்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார்.

சுகாதார நிபுணர்களுடன் தொடர்புடைய சிலர் உட்பட, போலி பாஸ்களை விநியோகிப்பது தொடர்பாக 400 விசாரணைகள் திறக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தர்மானின் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments