இந்திய மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு?இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது ஏற்புடையதல்ல. இந்திய மீனவர்களைப் பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் கடற்படையினரால் சுடப்பட்டதில் குஜராத் மீனவர் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்திய மீனவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அவர்களைத் தனிமைப்படுத்தி அதன் பின்னர் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் மீனவர்கள் மீது கிருமிநாசினி ஊற்றியது மனிதாபிமானம் இல்லாத செயல் .மேலும், இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும்போது அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை மத்திய உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments