குழாய்க்கிணறை திறந்து வைத்த கஜேந்திரகுமார்!கிளிநொச்சியில் உதய நகர் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் உறவுகளது நிதியில் குழாய்கிணறமைத்து வழங்கியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

1995 ம் ஆண்டு நடந்த யுத்தத்திலும் இறுதி யுத்தத்திலும் கணவன் மற்றும் மனைவியென காயமடைந்த குடும்பத்திற்கே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஊடாக மற்றும் செயலாளர்ச்செல்வராஜா கஜேந்திரன் ஊடாகவும் லண்டன் வாழ் உறவுகளின் ஊடாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் குழாய்க்கிணறு செய்து மற்றும் நீர்த்தாங்கி , மோட்டார் பொருத்தி வழங்கி இருந்ததுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை இன்று திறந்து வைத்துள்ளார்.
No comments