உள்ளே-வெளியே:சுதந்திரக்கட்சி முடிவு!

 


பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியே போகலாமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(02) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கட்சியின் தலைமையகத்தில்  இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்றையக் கூட்டத்தில், சமகால அரசியல் நிலைமை, சமையல் எரிவாயு பிரச்சினை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ இதனைக் கூறியுள்ளார்.


No comments