இலங்கை வந்தது அமெரிக்க வாகனமாம்!



அமெரிக்க தூதரகத்தால்  ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது.


இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன கார் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.


எனினும், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த கார் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி தெரிவித்தார்.


மேலும், அந்த கார் வேறொருவரால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments