கூட்டமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம் வலி.கிழக்கு கூட்டமைப்பு சார்பு பிரதேச சபை உறுப்பினர்,  சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து  இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  


ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதுடன் தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார். 

அந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்காத நிலையில் இன்றைய தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , வீட்டுக்குள் பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.  

இவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம்  என நம்பப்படுகிறது

No comments