அடுத்து புகையிரத போராட்டம்!இலங்கையில்   பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் முறையற்ற இடமாற்றம், புகையிரத திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படாமை, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாகவும் எமது தொழிற்சங்க நடடிக்கைகள் பொது பயணிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம் எனவும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

No comments