யாழ் பல்கலைகழக ஊழியர்தள் போராட்டம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானித்தமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இதனொரு கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலிலும் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

கல்விச்சாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்குதல், சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.

No comments