உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரலில்!உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய உள்ளது.அதனால் அதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே தயாராகி வருவதாக தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடகிழக்கில் உள்ளுராட்சி மன்றங்களது வரவு செலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டுவருகின்றது.இந்நிலையில் யாழ்.  மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம்  ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


No comments