சீன முதலீட்டை வரவேற்கிறார் டக்ளஸ்!



யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள  சீன கடலட்டை வளர்ப்பு பண்ணையினை சீன தூதர் பார்வையிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து,  கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தததாக அமைச்சரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கை சீன கூட்டு முயற்சியான குயிலான்  நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப் பெருக்கப் பண்ணையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிலையில் கருத்து தெரிவித்த டக்ளஸ், மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முநலீட்டு முயற்சிகளை வரவேற்பதாக  தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த அரியாலை கடலட்டை பண்ணை சட்டவிரோதமாக இயங்கிவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments