முதுகில் சுளுக்கு!! நிகழ்வில் தவறவிட்டார் மகாராணி


இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு முதுகு சுளுக்கு ஏற்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் மத்திய லண்டனில் நடைபெறும் நினைவு ஞாயிறு ஆராதனையில் கலந்து கொள்ளப் போவதில்லை என பக்கிங்ஹாம் அரண்மனை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இராணி மிகுந்த வருத்தத்துடன் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்ற முடிவை இன்று காலை எடுத்தார் என்றும் நிகழ்வில் கலந்துகொள்ளாதமை ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சமீபத்திய வாரங்களில் நிகழ்வுகளை இரத்து செய்த பின்னர் பொது நிழக்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, வேல்ஸ் இளவரசரால் அவரது மாட்சிமையின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக டச்சஸ் ஆஃப் கோர்ன்வால், கேம்பிரிட்ஜின் டியூக் மற்றும் டச்சஸ், வெசெக்ஸின் ஏர்ல் மற்றும் கவுண்டஸ் மற்றும் தி பிரின்சஸ் ராயல் ஆகியோரும் திட்டமிட்டபடி இன்னும் கலந்து கொண்டனர்.

இரண்டாம் உலகப் போரில் ராணுவ ஓட்டுநராகப் பணியாற்றிய இராணிக்கு இன்றை நாள் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

No comments