கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு


மானிப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

இதனால் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.


No comments