வழிபாடுகளை தடுக்க நீதிமன்றம் மறுப்பு!





மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் திருப்பலிகள் மற்றும் ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும்,குறித்த திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளடங்களாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை மன்னார் நீதிமன்றம் நேற்று (19) நிராகரித்துள்ளது.

இன்று தொடக்கம் 27 ஆம் திகதி வரை மன்னார் ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில்

விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம்பெற உள்ளதாகக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த விண்ணப்பங்களே நீதிமன்றத்தினால், நிராகரிக்கப்பட்டுள்ளதாக   சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளடங்களாக சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ( மன்னார் நீதிமன்றத்தில் விசேட விண்ணப்பம் ஒன்றை நேற்று (19) செய்திருந்தனர்.


மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் திருப்பலிகள் மற்றும் ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும்,

குறித்த திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு எதிராக  சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தலைமையிலான  சட்டத்தரணிகள் இணைந்து விண்ணப்பம் செய்திருந்தனர். குறிப்பாக சுகாதார வழி நடைமுறைகளுக்கு அமைவாகவும், அதனை மீறாத வகையில் தற்போது நாட்டில் கொரோனா

தொற்று அதிகமாக காணப்படுகின்றமையினால் சுகாதார வழி முறைகளை மீறாத வகையிலும், ஆலயங்களில் இடம்பெறும் நாளாந்த திருப்பலி,பூஜை வழிபாடுகளை

மேற்கொள்ளுவதற்கு தடை விதிக்காத வகையில்,இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற அடிப்படை உரிமைகளை மீறாத வகையில் அடிப்படை உரிமை

சுதந்திரத்தை பாதிக்காத வகையில் சமய வழிபாடுகள் மற்றும் யுத்தத்தின் போது இறந்த உறவுகளை நினைவேந்துகின்ற நடவடிக்கைகளையும் தடை செய்யாத வகையில் கட்டளை ஒன்றை பிறப்பிக்க நீதவானிடம் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைவாக விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் அல்லது கொடி,சின்னங்களை பயன்படுத்தி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்று நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

மேலும் ஆலயங்களில் இடம் பெறுகின்ற சாதாரண திருப்பலி மற்றும்  பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என்றும், கண்டிப்பாக சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின் பற்றி நாளாந்த பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


No comments