இராணுவ முக்கியஸ்தராக சொல்லிக்கொள்ளும் அருண் கைது!இலங்கை இராணுவத்தினால் இயக்கப்படும் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் அதனை மறைக்க தன்னை அரசின் பங்காளியாக காண்பித்துக்கொண்டார்.

அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.

இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட போதிலும் அதனை தாண்டி கைது நடந்துள்ளது..


No comments