கோத்தா அரசு:எந்நேரமும் கவிழலாம்!
இலங்கையின் ஆளுந்தரப்பு எந்நேரமும் கவிழும் நிலைமை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

பங்காளிகள் எதிர்கட்சியான ஜக்கியமக்கள் சக்தியுடன் தமது பேரங்களை தொடங்கியுள்ளனர்.

அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் முறுகல் நிலை, தற்போது பகிரங்கமாகவே இடம்பெறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,எப்போது வேண்டுமானாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பகிரமான அறிவிப்பொன்றை விடுக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ​செயற்படும் நோக்கில் காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். பதிலுக்கு சுதந்திரக் கட்சியும் பதிலடிக்கொடுத்துவருகுன்றது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்பிலான தங்களுடைய நிலைப்பாட்டை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பகிரங்கமாகவே அறிவித்து வரருகின்றார்.

அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தனஎம்முடன் இணைந்திருக்காவிட்டால் கதவு மூலையில் தான் நின்றிருக்க வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல் செய்யும் போது வாலை வளைக்கும் முறை எமக்குத் தெரியும் பலனை பெறும் நேரம் எமக்குத் தெரியும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்கஅரசாங்கம் எடுத்த தீர்மானம் ஒன்றை, விவசாயத்துறை அமைச்சரை மாத்திரம் அடிப்படையாக வைத்து,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டை முன்வைப்பது தவறானது. இத்தீர்மானம் அமைச்சரவையில் எடுத்த தீர்மானம்.


அமைச்சரவைக்குள் இணக்கத்தை தெரிவித்து விட்டு, வெளியே சென்று மற்றொரு கருத்தை கூறுவது தவறு.அரசாங்கத்துக்குள் இருக்கும் போது, சிறந்த முறையில் இருப்பதற்கான தர்மம் ஒன்று உள்ளது. ஓரிருவர் அவ்வாறு இருக்க முடியாவிட்டால், தயவு செய்து வெளியே சென்று எதிர்க்கட்சியில் அமருங்கள் என்றார்.


அமைச்சர் பிரசன்ன ரணதுங்கஅரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்துள்ளமையால் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆனால், எம்முடன் 150 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்த பின்னரே அவர்கள் இணைந்தனர்.


இந்த நேரத்தில் கட்சி ரீதியில் காற்று அடித்துக்கொள்ளாமல், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு இணைந்து செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தஇந்த அரசாங்கத்தை உருவாக்க அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் தான். ஆனால், அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பதற்காக சிலருக்கு அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு தேவை இருந்தால், அந்த சவாலுக்கு முகம் கொடுக்க எமது குழு தயாராகவே உள்ளது.


கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை கட்சிக்குள்ளேயே பேசி முடித்து விட வேண்டும். ஆனால், சிலருக்கு எந்த இடத்தில் எவ்வாறு கதைப்பது என்ற புரிதல் இல்லாமல் உள்ளது என்று தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தசகல கூட்டணி கட்சிகளுடனும் இணைந்து 11 வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். எனவே, அதனை அனைவரும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். இன்று மக்கள் வாழ்வதற்கான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து, அதற்கான தீர்வினை வழங்க வேண்டும்.


ஆனால், இவர்கள் அதனை பின்புறமாக மறைத்துவிட்டு, தமது தேவைகளுக்காக குரல் கொடுக்கின்றனர்.இத தொடர்பில் மக்கள் தீர்மானிப்பர் என்றார்.இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாஇது மக்கள் வழங்கிய அதிகாரம். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு வேறாக வாக்களிக்கவில்லையே.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கே வாக்களித்தனர். எனவே இந்த பகுதி எனது, அந்த பகுதி அவரது என பிரித்து வேறாக்குவது சிறந்த விடயமல்ல. யாராவது இந்த அரசாங்கத்துடன் இருக்க கூடாது.


இருப்பது தவறு என நினைப்பார்களாயின் அவர்களை வலுக்கட்டாயமாக வைத்துக்கொள்ளமாட்டோம் என குறிப்பிட்டார்.இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆசன அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதுடன், கடந்த வாரம் முழுவதும் கட்சியின் தலைமையகத்தில் நேர்காணல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கம் தமது கட்சியை புறக்கணிப்பதாக அக்கட்சியில் உள்ள பலர் நீண்டகாலமாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில், தங்களுக்கு விருப்பமான தீர்மானத்தை எடுக்குமாறு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர அண்மையில் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.


இதேவேளை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சேறு பூசும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொதுஜன பெரமுனவின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலானது, இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் முரண்பாட்டின் உச்சக்கட்டமே என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments