வடக்கிற்கு வருகின்றது ஞானசாரர் குழு!ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற இலங்கை ஜனாதிபதியின் செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற வடக்கிற்கு வருகை தரவுள்ளது.

இக்குழுவிற்கு யாழ்.இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரான ஐயம்பிள்ளை தயானந்தராஜாவை பிள்ளையானும் யோகேஸ்வரி பற்குணராஜாவை டக்ளஸ் தேவானந்தாவும் இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரனை ஜீவன் தொண்டமானும் முன்மொழிந்துள்ள நிலையில் தற்போது 14 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியானது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் ஞானசார தேரர் தலைமையில் குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் 21ம் திகதி வருகை தந்து சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments