அலிசப்ரியின் சகோதரனும் வீட்டிற்கு!நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளன.

நீதியமைச்சர் அலிசப்ரியின் சகோதரர் மொஹமட் யுவேஸ், பெற்றோல் களஞ்சியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்து வருகிறார். 

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதை அடுத்து, நீதியமைச்சர் அலி சப்ரி அதிருப்தியடைந்திருந்தார்.

இந்நிலையில்  தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், அவரது சகோதர் மொஹமட் யுவேஸ் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

No comments