பாதி தேங்காயில் பட்ஜெட்!



இலங்கையில்  தேங்காயினை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு  ஒரு வீட்டுக்கு தேங்காய் பாதி போதுமானதாகும் என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும தெரிவித்தார்.

தேங்காய் பால் எடுக்கும் போது கையால் பிழிந்தால் 20-30 வீதம் அளவில் தேங்காய் பால் கிடைத்தாலும், அரைப்பான் (Grinder), திரிகைக்கல் ஊடாக அரைத்து எடுக்கும் போது 50 வீதத்திற்கும் அதிமான அளவு தேங்காய் பால் பெறமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 சதவீதம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

No comments