சீமெந்து,சீனி எல்லாமுமே வருகிறதாம்!

 


இலங்கையில்  நிலவும் சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சில வாரங்களில் சீமெந்து ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், சிமெந்து இல்லாததால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சீமெந்து நிறுவனத்தின் வெளிவிவகாரத் தலைவர் சந்தன நாணயக்கார, சீமெந்து ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 18 மற்றும் 28ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.

No comments