தடை மேல் தடை:அலறும் இலங்கை அரசு!தாயகத்தில் தமிழீழ மாவீரர் தினத்திற்கான தடைகளை பிறப்பிக்க இலங்கை அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கார்த்திகை மாத இறுதிவரையில் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் எந்தவொரு பொது நிகழ்வும் நடாத்த அனுமதிக்க வேண்டாம் என இலங்கை காவல்துறை நகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளது நினைவுதூபிகள் அமைந்திருந்த தீருவில் வெளியில் பொது நிகழ்வு நடாத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகர சபையிடம் அனுமதி கோரியிருந்தார். 

கோரிக்கைக்கு பதிலளித்துள்ள நகர சபைத் தவிசாளர் ச.செல்வந்திரா இம்மாத இறுதி வரை பொது நிகழ்விற்கு இடத்தை வழங்க மறுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக இலங்கை காவல்துறையால்  ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் மாவீரர் தின நினைவேந்தலிற்கு தடை விதிக்க மறுத்திருந்த நிலையில் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துள்ளது.


No comments